தமிழக சட்டப்பேரவை தேர்தல் : தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு 21ஆம் தேதி தமிழகம் வருகை
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கத் தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழு இம்மாதம் 21ஆம் தேதி தமிழகம் வர உள்ளது.சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழு வரும் 21-ந் தேதி தமிழகம் வரவுள்ளது.தேர்தல் தயார் நிலை, அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை அறிய இந்த உயர்மட்ட குழு தமிழகம் வர இருக்கிறது.
தமிழகத்தின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் உயர்மட்டக் குழுவினர் 21 ஆம் தேதி பிற்பகலில் ஆலோசனை நடத்த உள்ளனர்.அன்று காலையில், 11.30 மணியளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித்தனியாகச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறுவார்கள். 22-ந் தேதி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் இத குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.