காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விஜய் ரசிகர்கள் திடீர் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகப்பட்டினத்தில் விஜய் ரசிகர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையிலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. அதிமுக, பாஜகவை தவிர திமுக உள்பட பெரும்பாலான கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனம் தெரிவித்து பேராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இதற்கிடையே, காவரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரையில் போராட்டம் நடத்தப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாகப்பட்டினத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதுயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>