தேச பக்தி பாடல் வெளியிட்ட ஜெயம் ரவி..
நடிகர் ஜெயம் ரவி தற்போது நடிக்கும் படம் பூமி. இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லஷ்மண் இயக்குகிறார். இப்படம் பற்றி வலைத் தளங்களில் ஒடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதுபற்றி படத் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.காதல், ரொமான்ஸ், குடும்ப படங்களில் நடித்து வரும் ஜெயம் ரவி இப்படத்தில் விவசாயியாக நடிக்கிறார். இதில், வந்தே மாதரம் என்று தேசபக்தியைத் தூண்டும் பாடல் இடப்பெறுகிறது.
டி.இமான் இசை அமைக்க மதன் கார்க்கி பாடல் எழுதி உள்ளார். உச்ச சாயலில் இப்பாடல் உணர்ச்சி பெருக்கைத் தூண்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இப்படல் நேற்று வெளியிடப்பட்டது. இதுபற்றி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள ஜெயம் ரவி தேச பக்தி பாடல் வந்தே மாதரம் என தெரிவித்துள்ளார். பூமி படம் பற்றி இயக்குனர் லட்சுமண் கூறும்போது, ஜெயம் ரவி இதுவரை நடித்துள்ள 24 படங்களிலிருந்து மாறுபட்ட படமாக அவரது 25வது படம் பூமி உருவாகி இருக்கிறது. சமுதாயத்துக்குத் திரும்பத் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட கதை.
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட படம் அத்துடன் விவசாயியாக நடிக்கிறார் ஜெயம் ரவி. ஷங்கர் பட பாணியில் இதில் சமுதாய கருத்து இருக்கும் வழக்கமான கிராமத்துக் கதை அல்ல. திருடா திருடாவில் பார்த்தது போன்ற ஒரு தோற்றம் இருக்கும் என்றார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. இந்தி நடிகர் ரோனித் ராய் வில்லனாக நடிக்கிறார். கடந்த 2 வாரமாகப் பூமி படத்தின் புரமோஷனில் ஜெயம் ரவி ஆர்வமாக இருக்கிறார் . தனது டிவிட்டர் பக்கத்தில் பட போஸ்டர். டீஸர், பாடல் எனப் பரவலாக வெளியிட்டு பூஸ்ட் செய்து வருகிறார்.
சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் பூமி படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது என்று கோவுட்டில் பேச்சு உள்ளது.இப்படத்தைத் தவிர மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் ஜெயம் ரவி. அடுத்த ஜன கன மன என்ற படத்திலும் நடிக்கிறார்.