சிறைத்தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மனைவியை கொன்று தற்கொலை
2010 ஆம் ஆண்டு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன். இவர் மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் என்பவரிடம் ஒரு புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருக்கப் பெருமாள் பாண்டியன் டாக்டர் அசோக் குமாரிடம் 7 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளார்.இதன் பேரில் ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மீது, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துணை கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்து பெருமாள் பாண்டியனைக் கைது செய்தார்.
இவர் மீதான வழக்கு மதுரை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று முன்தினம் மதுரை தனி நீதி மன்றம் தீர்ப்பளித்தது.இதனுடைய அவமானம் தாங்காமல் ஆய்வாளர் பெருமாள் பாண்டி மதுரையில் உள்ள தனது மனைவி உமா மீனாட்சியைச் சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.செந்தூர் போலீசார் இருவரது சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி விட்டுத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்