வேளாண் தொடர்பான விவரங்களுக்கு உழவன் ஆப்: முதல்வர் தொடக்கம்
வேளாண் சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்வதற்காக ‘உழவன்’ என்ற மொபைல் ஆப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
வேளாண் தொடர்பான தகவல்கள் குறித்து தெரிந்துக் கொள்ளும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘உழவன்’ என்ற மொபைல் ஆப்பை தொடங்கி வைத்தார். இந்த ஆப் மூலம், மானியத் திட்டங்கள், பயிர் காப்பீடு, உர விற்பனை, உரம் இருப்பு நிலை, அரசு வேளாண், தோட்டக்கலைத் துறை, தனியார் நிறுவனங்களின் விதை இருப்பு விவரம், வேளாண் இயந்திரங்கள், வாடகை மையங்கள், விளை பொருட்களின் சந்தை விலை, வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை, வேளாண் விரிவாக்க பணியாளர்களின் கிராம வருகை உள்ளிட்ட விவரங்களை இந்த ஆப் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.
மேலும், வேளாண்மை தொடர்பான திட்டங்களின் டிராக்டர், பவர் டில்லர் மற்றும் நிழல் வலைக்குடில், பசுமைக்குடில் போன்றவைக்கு மானியம் பெறவும் செயலியில் முன்பதிவு செய்யலாம். தொடர்ந்து, இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அம்மா உயிர் உரங்களின் விற்பனையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com