சிறுகுடல் புண்களை ஆற்றும்... தலையின் பொடுகினை போக்கும்.. இதை பயன்படுத்திப் பாருங்க!

கிராமங்களில் காலையில் வெறும் வயிற்றில் வேப்பங்கொழுந்தை மென்று தின்பதை இன்றும் காணலாம். வேப்ப இலைக்கு பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் மற்றும் அழற்சிக்கு எதிராக செயலாற்றும் திறன் உண்டு. ஒரு மாதம் தொடர்ந்து இவற்றை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு அல்லது சாற்றினை பருகி வந்தால் எல்லா வகை நோய் தொற்றுகளும் அகலும். 35 கிராம் வேப்பிலையில் 45 கலோரி (எரிசக்தி), 2.48 கிராம் புரதம், 8.01 கிராம் கார்போஹைடிரேடு, 0.03 கிராம் கொழுப்பு, 178.5 மில்லி கிராம் கால்சியம் (சுண்ணாம்பு சத்து), 5.98 மில்லி கிராம் இரும்பு சத்து, 6.77 கிராம் நார்ச்சத்து உள்ளது.

நீரிழிவுவேப்பிலையை தினமும் உட்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்தும். வேப்பிலையில் உள்ள வேதி கூட்டுப்பொருள்கள் உடலிலுள்ள இன்சுலின் ஏற்பிகளை தூண்டி போதுமான அளவு இன்சுலினை பெற்றுக்கொள்ளச் செய்யும். நீரிழிவு பாதிப்பு அதிகமாகாமல் தடுக்கப்படும்.

முகப்பருவேப்பிலை சாறு முகத்திலுள்ள பிசுக்கு மற்றும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது. சரும வறட்சி, அரிப்பு, சிவத்தல் ஆகியவற்றையும் பருக்களையும் இது குணமாக்குகிறது.

வாய் ஆரோக்கியம்வேப்பங்குச்சியை மென்று பல் துலக்குவதால் எச்சிலிலுள்ள ஆல்கலைன் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது. வாயிலுள்ள கிருமிகளுக்கு எதிராக இது செயல்படுகிறது. பல் காறை மற்றும் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.

பொடுகுபூஞ்சைக்கு எதிராகவும் பாக்டீரியாவுக்கு எதிராகவும் செயல்படும் வேப்பிலை தலையிலுள்ள பொடுகினை போக்கக்கூடிய இயல்பு கொண்டது. இதிலுள்ள ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் (ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள்) தலைமுடிக்கு வலு சேர்க்கிறது.

More News >>