முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் சுதாகரன்... உத்தரவிட்ட நீதிமன்றம்!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா தண்டனைக் காலத்தின்படி 2021ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி இரவு 9 மணியளவில் விடுதலையாக உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த ரூ.10 கோடி அபராதத் தொகை செலுத்தப்பட்டு விட்டது. இதற்கிடையே, சசிகலாவுக்கு முன்னதாகவே சுதாகரன் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சசிகலா தரப்பு பேசுகையில், ``தண்டனை காலத்தைத் தொடங்குவதற்கு முன்பே சுதாகரன் 126 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதன்பிறகே அவருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது. அதனால் விடுதலைக்கு எந்த சலுகையும் கொடுக்கப்படாவிட்டாலும், இந்த 126 நாட்களைக் கழித்தால் போதும் நவம்பர் மாதமே சுதாகரன் விடுதலையாவார்" என்றனர்.

இப்போது அது உறுதியாகியுள்ளது. நவம்பர் மாதம் சிறை நிர்வாகம் ரீலீஸ் செய்யாததால் சுதாகரன் விடுதலை தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார். வழக்கு தொடரப்பட்டபோதே 92 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்ததால், அதனை 4 ஆண்டு தண்டனையில் இருந்து கழித்து முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் 92 நாட்களுக்கு பதிலாக 89 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதாகக் கூறி, சுதாகரனை விடுதலை செய்ய உத்தரவிட்டனர். அதன்படி அபராத தொகை 10 கோடி ரூபாய் செலுத்தினால் சுதாகரன் உடனே விடுதலை ஆவார் எனக் கூறப்படுகிறது.

More News >>