நட்சத்திர ஜோடியின் மறக்க முடியாத நிழல்-நிஜ படம்.. பிரபல புகைப்பட நிபுணர் வர்ணனை..

சினிமா நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்கள் எடுக்க ஸ்பெஷல் புகைப்பட நிபுணர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஜோசப் ராதிக். பிரபலமான திருமண புகைப்படக்காரர் இவர் அனுஷ்கா சர்மா-விராட் கோலி மற்றும் சமந்தா-நாக சைதன்யா போன்ற தம்பதிகளின் திருமணங்களின் போது புகைப்படங்களை எடுத்தார். கொரோனா ஊரடங்கு தளர்வில் நடந்த காஜல் அகர் வால் மற்றும் கவுதம் கிட்ச் லுவின் திருமண படத்தையும் இவர்தான் எடுத்தார். மற்ற நட்சத்திரங்களின் படங்களை எடுத்ததைவிட காஜல் திருமண புகைப்படம் தன் வாழ்நாள் படமாக அமைந்துவிட்டது என்று சொல்லி சில புகைப்படங்களை வெளியிட்டார். இது எப்போதும் விரும்பும் படமாக அமைந்து விட்டது என்றார்.

காஜல், கவுதமின் பெரிய உருவங்கள் பின்னணி நிழலில் இருக்க அவர்கள் இருவரும் காதலில் உருகி அளித்த நிழலின் முன்பாக அவர்கள் நிஜத்தில் அளித்த போஸுடன் கூடிய அற்புதமான படமாக அது அமைந்தது.இதுபற்றி அவர் கூறும்போது, "இந்த ஆண்டின் மத்தியில் நான் எடுத்த படங்களைத் திரும்பவும் பார்த்தேன். அப்போது இந்த படத்தின் பிரதிபலிப்பு என் கண்ணுக்குள்ளேயே நின்றுவிட்டது. பின்னர் என்னுள் ஒரு ஒளி திரும்பியது. இந்த படம் இரண்டு ஷாட்கள் தடையின்றி ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்த காட்சியாக அருமை யாக வந்திருந்தது. அழகான இரு ஆத்மாக்கள் ஒருவருக்கொருவர் எப்படி தங்களைக் கண்டுணர்ந்து ஒன்றாகிவிட்டனர் என்பது போன்றதாக இதை எண்ணத் தோன்றியது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, " இது எல்லா நேரத்திலும் எனக்குப் பிடித்த புகைப்படங்களில் ஒன்றாகும், இது அழகுக்கும் அன்பிற்கும் மட்டுமல்ல, இந்த நிகழ்வைப் புகைப்படம் எடுத்த எனது தனிப் பட்ட நினைவகம் ஆகும். இது என்னை எனது வேர்களுக்குள் இழுத்துச் செல்வதுபோல இருந்தது. உங்களால் முடிந்தால், நீங்கள் ஒரு ஜோடியை அமைதியான இதுபோன்று எடுக்க முயற்சி செய்யுங்கள். இது சில வினாடிகள் மட்டுமேயான நிகழ்வு என்றாலும். ஒரு திருமண பரபரப்புக்கு மத்தி யில், அமைதியான இந்த சிறிய தருணங்களை அவர்கள் இருவரும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார் கள். " என்றார் புகைப்பட நிபுணர் ஜோசப் ராதிக்.

காஜல் அகர்வால் திருமணம் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் மும்பையில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் கவுதமுடன் மாலத்தீவுக்குத் தேனிலவு கொண்டாட சென்றார் காஜல். 1 மாதம் இருவரும் தேனிலவு கொண்டாடினார்கள். இந்நிலையில் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பிலி ருந்து காஜலுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் கணவருடன் படப்பிடிப்பு அரங்கிற்கு வந்து சிரஞ்சீவி யை சந்தித்து ஆசி பெற்றார். அவர்களுக்கு சிரஞ்சீவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். இப்படத்தையடுத்து இந்தியன் 2 உள்ளிட்ட இரண்டு படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.

More News >>