இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் டோல்கேட்களே இருக்காது

இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில், நெடுஞ்சாலைகளில் எந்த டோல் பிளாசாக்களும் இருக்காது, அங்கு வசூலிக்கப்படும் பணம் இனி ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே வசூலிக்கப்படும்.தற்போது நாடகம் தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட்டுகள் எனப்படும் சுங்க கட்டணம் சாவடிகள் அமைக்கப்பட்டு அந்த வழியே செல்லும் வாகனங்களுக்கு அவற்றின் ரகத்துக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் இத்தகைய டோல்கேட்டில் வரி செலுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது.

இந்த கஷ்டத்தை இந்த சிரமத்தைப் போக்கப் பால் டிராக் எனப்படும் தானியங்கி கட்டணம் செலுத்தும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது இருப்பினும் இதிலும் சில குளறுபடிகள் இருப்பதால் தொடர்ந்து அரசுக்குப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. வாகனங்கள் டோல்கேட்டை கடக்க இன்னும் அதிகம் சிரமப்பட வேண்டியுள்ளது. இது எடுத்துவசூலிக்கும் நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வாகனங்கள் பணம் செலுத்துவதற்கு பிளாசாக்களில் நிறுத்தவோ அல்லது காத்திருக்கவும் அவசியமில்லை .

இது வாகனங்கள் செல்லும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத் தொகை தானாகக் கழிக்கப்படும்.இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, ஜி.பி.எஸ்-தொழில்நுட்ப அடிப்படையிலான டோலிங்கைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தில் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்றார். அனைத்து புதிய வாகனங்களும் ஜி.பி.எஸ் அமைப்புகளுடன் இணைக்கப்படும் என்றார்.தற்போதைய நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து வசூலிக்கப்படும் சுங்க வரி 34,000 கோடி ரூபாய் இலக்கு உள்ளது. கடந்த ஆண்டு, சுங்க வசூல் 24,000 கோடியாக இருந்தது என்று அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார்..

More News >>