பேக்கிங் செய்யப்படாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

பாக்கெட் அல்லது பாட்டில்களில் பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நித்தி என்பவர், முந்திரி தோலில் தயாரித்த எண்ணை யை சமையல் எண்ணையுடன் கலப்படம் செய்கின்றனர்.இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெய்யை உதிரியாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்து தான் விற்பனை செய்ய வேண்டும். கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை,உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்,மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரி பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்களை சில்லறை விற்பனை (பாகிங் செய்யப்படாத) செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.மேலும் , 2011 ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி சில்லரை விற்பனை தடை உள்ள நிலையில் சமையல் எண்ணெய் எவ்வாறு உதிரியாக விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய்யை தரத்தின் ஆய்வு செய்ய அரசு மற்றும் தனியார் ஆய்வங்கள் எத்தனை உள்ளது. மாவட்ட வாரியாக விவரங்களை தெரிவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் எத்தனை ஆய்வங்கள் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது,அதில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வாரியாக தெரிவிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரமற்ற எண்ணெய் விற்பனை செய்பவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போன்று கடுமையான நடவடிக்கை எடுக்க வில்லை என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 18 ம் தேதி ஒத்திவைத்தனர்.

More News >>