பட்டாக்கத்தியை வைத்து பர்த் டே : பதறும் கிராம மக்கள்
சிவகங்கை அருகே பட்டா கத்தியை வைத்து ஒருவர் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமத்தில் பெரியசாமி என்பவரது மகன் வினோத் தனது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடியுள்ளார். தனது நண்பர்களுடன் பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை தொடர்ந்து தேவகோட்டை போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் சில ரவுடிகள் இதே ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடி கைதான நிலையில், கண்டதேவி கிராமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் மூவரது பெயர் ரவுடி லிஸ்டில் இருக்கிறதாம். தேவகோட்டை அருகே நடந்த இந்த சம்பவம் மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.