வனிதாவின் அடுத்த காதல் பயணம்..! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்..
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். அதுவும் இவர் பிக் பாஸ் சென்று வந்தவுடன் இவரை யாரலும் கையில பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கல்யாணம் அமைந்தது. ஊரடங்கு காலத்தில் வனிதா தனியாக ஒரு சேனல் தொடங்கினார். இதற்கு பீட்டர் பால் என்பவர் இவருக்கு பல விதத்தில் உதவியாக விளங்கினார். இந்நிலையில் இருவரின் மனதில் காதல் மலர்ந்துவிட்டது.
ஏற்கனவே பீட்டர் பாலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இருப்பினும் பல எதிர்ப்புகளை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பலர் இந்த திருமணம் நீண்ட நாள் நிலைக்காது என்று சரியாக கணித்து இருந்தனர். அதுபோலவே திருமணம் ஆகி ஓராண்டு கூட சேர்ந்து வாழவில்லை. அதற்குள் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்த செய்தியே ஆராத நேரத்தில் அதற்க்குள் இன்னொரு காதலில் விழுந்து விட்டதாக தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளனர். இதனால் நெட்டிசன்கள் வனிதா அக்காவை வெச்சி செய்து வருகின்றனர். இந்த தடவை எந்த வாயில்லா பூச்சி இவரிடம் மாட்டி கொண்டு அழிய போகிறது என்பது தெரியவில்லை.