பேச்சிலர் பார்ட்டியில் சரக்கு தீர்ந்ததால் மாப்பிள்ளையை காலி செய்த நண்பர்கள்..!
பேச்சிலர் பார்ட்டியில் கேட்ட அளவுக்கு சரக்கு வாங்கி கொடுக்காததால் நண்பர்கள் சேர்ந்து புது மாப்பிள்ளையை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பலிமுகிம்புர் கிராமத்தை சார்ந்தவர் பப்லு. இவருக்கு வயது 28 இருக்கும். பப்லுக்கு அவரது பெற்றோர்கள் தலைமையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் என்றால் தனது நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி வழங்குவது வழக்கம். அது போல பப்லுவும் திருமணம் முடிந்த கையேடு அவரது நெருங்கிய நண்பர்கள் ஆன 6 பேருக்கு பேச்சிலர் பார்ட்டியை ஏற்பாடு செய்து இருந்தார்.
சரக்கு சீக்கிரமாக தீர்ந்ததால் நண்பர்கள் மாப்பிள்ளையிடம் தகராறு செய்துள்ளனர். அப்பொழுது நண்பர் கூட்டத்தில் இருந்த ராம் கில்லாடி என்பவர் புதுமாப்பிள்ளையை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். பிறகு அங்கு இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த மாப்பிள்ளையை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து பாதிக்கப்பட்டவரின் குடும்பம் போலீஸில் புகார் அளித்துள்ளது. போலீஸ் முக்கிய குற்றவாளியான ராம் கில்லாடியை பிடித்துவிட்டனர். ஆனால் மற்ற ஐந்து பேரும் தலைமறைவு ஆனதால் தீவிரமாக தேடிவருகின்றனர்.