மிருதுவான சப்பாத்தி செய்யனுமா?? அப்போ இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..

சப்பாத்தியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சப்பாத்தியை மிகவும் விரும்பி உண்பார்கள். கோதுமை மாவில் செய்கின்ற சப்பாத்தியை தினமும் இரவு வேளையில் தவறாமல் சாப்பிட்டு வந்தால் உடம்பில் சர்க்கரையின் அளவை சீர்செய்கிறது. சரி வாங்க சப்பாத்தியை எப்படி சாஃப்டாக செய்வது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:- கோதுமை மாவு -1 கப் மைதா மாவு -2 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு வடித்த கஞ்சி தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை:- ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு கப் கோதுமை மாவு,2 ஸ்பூன் மைதா ஆகியவை சேர்த்து கொள்ள வேண்டும். சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டும் என்றால் வடித்த கஞ்சி தண்ணீரை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம். பிசைந்த மாவின் மேல் ஈரத்துணியை கொண்டு மூடி 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்த பிறகு மாவை உருண்டி கொள்ளவும். உருண்டிய மாவை தட்டையாக உருட்டி கொண்டு கல்லில் போட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி...

More News >>