அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டடத்தில் தீ விபத்து!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்குச் சொந்தமான, `ட்ரம்ப் டவரில்’ தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக இருக்கும் டொனால்டு ட்ரம்ப், அரசியலுக்கு வருவதற்கு முன்னர் பல துறைகளில் வியாபாரம் செய்து வந்த மல்டி மில்லியனர். அவருக்குச் சொந்தமாக நியூ யார்க் நகரின், மென்ஹாட்டன் பகுதியில் `ட்ரம்ப் டவர்’ என்ற கட்டடம் இருக்கிறது.

இந்த கட்டடம் உலக புகழ்பெற்றது என்பது கூடுதல் செய்தி. இந்நிலையில், இந்த கட்டடத்தின் 50-வது மாடியில், அமெரிக்க நேரப்படி நேற்று மாலை 6 மணிக்கு தீ பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை. இது குறித்தான விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>