தினமும் கலாம் சிலைக்கு பூ வைத்து அழகு பார்த்தவர் அடித்துக் கொலை...!
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சிலைக்கு தினமும் பூ வைத்து அழகு பார்த்து வந்த முதியவர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் சிவதாசன் (66). இவருக்கு சசிகலா என்ற மனைவி உண்டு. கடந்த சில வருடங்களுக்கு முன் கொச்சிக்கு சென்ற இவர் பின்னர் வீட்டுக்கு செல்லவில்லை. கொச்சியிலேயே பழைய இரும்பு சாமான்களை விற்று காலத்தை தள்ளி வந்தார். இவர் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் கலாமை நேரடியாக பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஆவல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் கொல்லம் அந்த அப்துல் கலாமை அவர் நேரடியாகச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் திருவனந்தபுரத்திற்கு கலாம் வந்த போதும் சிவதாசன் சந்தித்தார். அப்போது ஊருக்குத் திரும்பிச் செல்ல அவருக்கு கலாம் 500 ரூபாய் கொடுத்து அனுப்பினார். இதன் பின்னர் சிவதாசனுக்கு அப்துல் கலாம் மீது பாசம் மிகவும் அதிகரித்தது. கலாம் மரணமடைந்த போது சிவதாசன் மிகுந்த மன வேதனை அடைந்தார். பல நாட்கள் இவர் சாப்பிடாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கொச்சி மரைன் டிரைவ் பகுதியிலுள்ள பூங்காவில் அப்துல் கலாமின் மார்பளவு உள்ள ஒரு சிலை வைக்கப்பட்டது. அன்று முதல் சிவதாசன் தினமும் நாள் தவறாமல் அந்த சிலைக்கு பூக்களால் அலங்காரம் செய்வார். மேலும் அந்த சிலையை சுற்றி ஏராளமான மலர்ச் செடிகளையும் அவர் நட்டு வளர்த்தார்.கலாமின் சிலைக்கு அருகே உள்ள நடைபாதையில் தான் இவர் தினமும் இரவில் படுத்து தூங்குவார். சிவதாசனின் இந்த கலாம் பாசம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக தகவல் பரவியது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிவி, பத்திரிகை என அனைத்திலும் சிவதாசன் குறித்த செய்தி வெளியானது. ஏராளமானோர் நேரடியாக சென்று சிவதாசனை சந்தித்து வீடு கட்டித் தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் காலையில் சிவதாசன் இறந்த நிலையில் காணப்பட்டார்.
இதுகுறித்து மரைன் டிரைவ் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கை மரணமாக இருக்கும் என்று தான் முதலில் போலீசார் கருதினர். ஆனால் பிரேத பரிசோதனையில் சிவதாசனின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் சிவதாசனை கொன்றது அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிவதாசனுக்கு பேரும், புகழும், பணமும் கிடைப்பதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அவரை அடித்துக் கொன்றதாக தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை குடித்துவிட்டு சிவதாசனுடன் இவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். விசாரணைக்கு பின் போலீசார் ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.னைக்கு அனுப்பி வைத்தனர். இயற்கை மரணமாக இருக்கும் என்று தான் முதலில் போலீசார் கருதினர். ஆனால் பிரேதப் பரிசோதனையில் சிவதாசனின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் சிவதாசனை கொன்றது அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிவதாசனுக்கு பேரும், புகழும், பணமும் கிடைப்பதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அவரை அடித்துக் கொன்றதாக தெரிவித்தார். ஏற்கனவே பலமுறை குடித்துவிட்டு சிவதாசனுடன் இவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். விசாரணைக்குப் பின் போலீசார் ராஜேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.