யாராவது இப்படி செய்ய முடியுமா: சவால் விட்ட நடிகை..
இப்போதெல்லாம் ஹீரோயின்கள் படத்தில் நடிக்க எப்படி ஆர்வம் காட்டுகிறார்களோ அந்தளவுக்கு தங்களது உடலைக் கச்சிதமாக, ஷேப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மில் எவ்வளவு கடினமாக ஒர்க் அவுட் செய்ய முடியுமோ அவ்வளவு கடினமாக ஒர்க அவுட் செய்கிறார்கள். சமந்தா தொடங்கி ரகுல், காஜல் அகர்வால், லட்சுமி மேனன், சிம்ரன், எனப் பல ஹீரோயின்கள் ஜிம்மிலும், நடனம் ஆடியும் செய்யும் பயிற்சியையும் இணையதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.இளம் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் யோகன், திருட்டு விசிடி, அதியன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். ரஜினியின் காலா படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்தார்.
தற்போது சிண்டி ரில்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை3, புரவி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தவிர ஹாலிவுட் படம் ஒன்றிலும் அறிமுகமாகிறார். 120 ஹவர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.டி நந்தா டைரக்டு செய்கிறார். இவர் வல்லதேசம் என்ற படத்தை இயக்கியவர். இதில் பால் டெர்ரி, க்ரோனின், இமான் சாண்ட் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹாலிவுட் பட ஆர்வம் சாக்ஷியை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார். சிறிய இடைவெளி கிடைத்தாலும் உடனே ஒர்க் அவுட் செய்ய தொடங்கி விடுகிறார். அவர் சில வெளி நாட்டுப் பாணி பயிற்சிகளைச் செய்து அதைத் தனது இன்ஸ்டாகிராமில் வீடியாவாக வெளியிட்டு இதுபோல் உங்களால் செய்ய முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: அட்டகாசமான வேகமான ஒர்க் அவுட் செய்கிறேன். இதுபோல் உங்களால் செய்ய முடியுமா? ஃபிட்னஸ் என்பது ஒரு பயணம். அதை ஒரே இரவில் செய்துவிட முடியாது. சாப்பிடுவதும், அளவுக்கு மீறி உண்பதும். மீண்டும் வொர்க் அவுட்டைத் தூண்டுகிறது. பட்டினி கிடையாது நண்பர்களே. ஆரோக்கியமாக இருங்கள். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். விரிவான ஒர்க் அவுட் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். கோலிவுட் நடிகைகள் பலருக்குப் பாலிவுட், ஹாலிவுட் கனவுகள் இருக்கின்றன. அசின், தமன்னா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள் பாலிவுட்டிலும் நடிக்கின்றனர். ஆனால் சாக்ஷி அகர்வாலுக்குக் குறுகிய காலத்திலேயே ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறார்.