பலத்த எதிர்ப்பு : ஊட்டி மலை ரயில் இன்னிக்கு ஸ்டாப்

மேட்டுப்பாளையம் அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு காரணமாக மேட்டுப்பாளையம் உதகை சிறப்பு மலைரயில் இந்தவாரம் இயக்கப்படவில்லை.உலகப் புகழ்பெற்ற ரயில் பயணத்தை தரும் ஊட்டி மலை ரயில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை சிறப்பு ரயிலை இயக்க தனியார் மூலம் தென்னக ரயில்வே முடிவு செய்தது. இதன்படி தனியார் ஒருவர் மலை ரயிலை ஐந்து லட்சம் ரூபாய் வாடகைக்கு எடுத்தார். பேக்கேஜ் என்ற அடிப்படையில் நபர் ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்று நிர்ணயம் செய்து கடந்த மாதம் 21 மற்றும் 28 இரண்டு சனி ஞாயிறு கிழமைகளில் இயக்கப்பட்டது.

இந்த ரயிலை தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்தமாதம் 28 ஆம் தேதி அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மலை ரயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.இந்த வாரமும் ரயிலை இயக்கினால் போராட்டம் நடத்துவோம் எனப் போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) தனியார் நிறுவனத்தினர் மலை ரயிலை வாடகைக்கு எடுக்காத காரணத்தினால் இந்த வாரம் மலை ரயில் இயக்கப்படவில்லை.

More News >>