ஆண்டுக்கு சம்பளம் ஒரு கோடி : அள்ளி வீசும் நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சர்வதேச நிறுவனங்கள் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளத்துக்கு மாணவர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்துள்ளன.மும்பை, கான்பூர், டெல்லி, குவஹாத்தி, காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி வளாகங்களில் சமீபத்தில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன. இதில் 30 மாணவர்கள் ரூ. 1 கோடி சம்பளத்துக்கு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் சாம்சங், சோனி, மைக்ரோசாப்ட், ஆரக்கில், ஆப்டிவர், கொஹெசிட்டி, ஆல்லே ஆகிய 7 நிறுவனங்கள் ஆண்டிற்கு ஒரு கோடியும் அதற்கு மேலும் சம்பளம் வழங்கி ஆட்களை தேர்வு செய்துள்ளன.கொரோனா தொற்று காரணமாக , பொருளாதார சிக்கலை பெரு நிறுவனங்கள் சந்தித்து வந்தாலும், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்பதை இந்த வேலைவாய்ப்பு நிரூபிக்கிறது.