அமெரிக்கா- மெக்சிக்கோ எல்லைக்கு சீல் வைத்தார் ட்ரம்ப்!

அமெரிக்கா- மெக்சிக்கோ எல்லைக்கு சீல் வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

ட்ரம்ப், அதிபராக பொறுப்பேற்ற பின்னர், பல அதிர்ச்சி கிளப்பும் அறிவிப்புகளை தொடர்ந்து முன் மொழிந்து வருகிறார். அதில் ஒன்றுதான், அமெரிக்கா- மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டுவது.

அத்துமீறி அமெரிக்காவுக்கு நுழைபவர்களையும், போதை மருந்து கடத்தப்படுவதையும் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்காவின் ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அந்தத் திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில், மெக்சிக்கோ எல்லைக்கு சீல் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப். இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், `தெற்கில் இருக்கும் நமது எல்லைக்கு நான் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளேன்.

நமது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் ஜனநாயக கட்சியினர் ஒத்துழைப்புத் தரவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். இந்த திடீர் நடவடிக்கைக்கு அமெரிக்காவின் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>