பார்கள் திறக்க கோரி டிச28 ல் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்
சென்னை முகப்பேர் சத்யா நகரில் தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் நலச் சங்க கூட்டம் நடந்தது. இந்த அமைப்பின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டது. ஆனால் பார்கள் இன்னும் திறக்கப்படவில்லை.பார்கள் திறக்காததால் பார் திறக்காமல் கட்டிடத்திற்குக் கொடுக்க முடியாமல் பலர் தவித்து வருவதாகவும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கு விற்பனை அடிப்படையில் தொடர் து 2 சதவீதம் பணம் செலுத்தி வருகிறோம்.
பார்கள் திறக்கப்படாததால் பாரில் பணிபுரிந்து வரும் 7 லட்சம் தொழிலாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பார் நடத்தும் உரிமையாளர்கள் 2 பேர் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.வரும் திங்கள் கிழமை அமைச்சர் தங்கமணியை நேரில் சந்தித்து இது குறித்துப் பேச உள்ளோம்.பார் திறக்க உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இல்லையேல் வரும் 28 ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு மேல் பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.