தமிழகத்தை உருவாக்க வந்த ஆட்சி திமுக ஆட்சி, உருக்குலைக்க வந்த ஆட்சி அதிமுக ஆட்சி: ஸ்டாலின் காட்டம்!
தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.அப்போது பேசிய ஸ்டாலின் அவர்கள் அதிமுக மற்றும் பாஜக கட்சி மற்றும் ஆட்சியை மிகக் கடுமையாகச் சாடினார். மேலும் கூறியதாவது, விவசாயிகளின் ஆட்சி எனச் சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சட்டத்தை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே இருக்கிறார் முதலமைச்சர் எனவும் கூறினார். சுயநலனுக்காகப் பொங்கல் பரிசு அறிவித்தாரா முதல்வர் எனக் கேள்வி எழுப்பினார். தமிழகத்தை உருவாக்க வந்த ஆட்சி திமுக ஆட்சி, உருக்குலைக்க வந்த ஆட்சி அதிமுக ஆட்சி எனக் கூறினார். பெண்களுக்கு ஒதுக்கீடு, சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்களை நியமிப்பது திமுக ஆட்சி தான் எனக் கூறினார்.
இளைஞர்களை வேலைக்குத் தகுதி உள்ளவர்களாக உருவாக்கியது திமுக ஆட்சி எனப் பேசினார். இளைஞர்களுக்குக் கணினியில் பயிற்சி அளித்ததும், பல்வேறு துறைகளில் கணினி மயமாக்கி திமுக தான் எனத் தெரிவித்தார். தனது நாற்காலி நிலைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்தமும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி எனக் குற்றம் சாட்டினார். சுயநலத்துடன் நுழைந்து பதவியில் நீடிக்கத் துரோகம் செய்த எடப்பாடிக்கு திமுக வையோ, என்னையோ விமர்சிக்கத் தகுதியில்லை எனக் கூறினார். வருவாய், மாசுக் கட்டுப்பாடு, ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 33 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
மேலும் இன்னும் 4 மாத காலத்தில் தமிழக ஆட்சிக் கட்டிலில் திமுக அறியணை ஏறும் என்று கூறியுள்ளார்.