இவாங்கா ட்ரம்புக்கு 101 டைனிங் ஹாலில் மோடி அளிக்கும் பிரமாண்டவிருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மகள் இவாங்கா இந்தியாவுக்கு வருகிறார். ஹைதரபாத்தில் உள்ள தாஜ் ஃபாலகுமா ஹோட்டலில் புகழ்பெற்ற '101 'டைனிங் ஹாலில் பிரதமர் மோடி அவருக்கு விருந்தளிக்கிறார்.
ஹைதபராத்தில் நடைபெறும் தொழில்முனைவோர் கூட்டமைப்பு மாநாட்டில் அமெரிக்க பிரநிதியாக பங்கேற்கிறார். 1,500 தொழில் முனைவோர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். சென்ற ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, இவாங்காவுக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று அவர் இந்தியா வருகிறார். செவ்வாய்க்கிழமை 4 மணி முதல் 6 மணி வரை தொழில்முனைவோர் கூட்டமைப்பு மாநாட்டில் பங்ககேற்கும் அவருக்கு அன்றைய தினம் பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்.
விருந்தில் இவாங்காவுடன் சேர்ந்து 100 பேர் பங்கேற்கின்றனர். இவாங்காவுக்கு இந்திய உணவு வகைகளுடன் அமெரிக்க உணவுகளும் விருந்தில் பரிமாறப்படுகின்றன.ஹைதபராத் சிறப்பு உணவு வகைகளும் மேஜையில் இடம் பிடிக்கின்றன.100 பேர் அமர்ந்து உணவு அருந்தினாலும், ஒருவர் பேசுவது அறையின் கடைசி பகுதியில் உள்ளவர் வரை கேட்கும் என்பதுதான் இந்த டைனிங் ஹாலின் ஸ்பெஷல். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விருந்து நடைபெறுகிறது.
இவாங்காவுக்கு வழங்கப்படும் இன்னொரு இரவு விருந்து தாஜ் ஃபாலகுமா ஹோட்டலில் திறந்த வெளியில் நடைபெறுகிறது. இதில், 2 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கிறார்கள்.இவாங்கா வருகையையொட்டி ஹைதரபாத் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.