நடிகையை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்.. தவறி விழுந்தவரை கண்டு அதிர்ச்சி..

பாலிவுட்டில் ஹீரோ, ஹீரோயின்களுக்கு பாடிகார்டுகளாக ஜிம் பாய்கள் நியகிக்கப்படுகின்றனர். அந்த கலாசாரம் தற்போது கோலிவுட் டோலிவுட் பக்கமும் வந்திருக்கிறது. விமான நிலையம் அல்லது படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும்போது ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அவர்களுடன் செல்ஃபி எடுக்க முயலும் போது அவர்களை குண்டு கட்டாக தூக்கி வீசுவது இந்த ஜிம் பாய் பாடி கார்ட்கள் தான்.சல்மான்கான், என்.டி.பாலகிருஷ்ணாவிடம் நெருங்கி செல்ஃபி எடுக்க முயலும் ரசிகர்கள் பலமுறை தள்ளு முல்லுக்கு ஆளாகி இருக்கின்றனர். சில சமயம் அந்த நடிகர்களிடம் அடியும் வாங்கி உள்ளனர்.

ஜெயம் ரவியுடன் பூமி, சிம்புவுடன் ஈஸ்வரன் படங்களில் நடித்திருப்பவர் நிதி அகர்வால். தெலுங்கிலும் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த படம் இன்னும் வெளியாகவில்லை. தெலுங்கில் அவரது படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. நிதிக்கு தெலுங்கில் ரசிகர்கள் உள்ளனர். ஐதாராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் நிதி அகர்வால் கலந்துகொண்டார். அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் அவரது கேரவேன் சுற்றி ரசிகர்கள் ஏராளமானவர்கள் சூழ்ந்துக் கொண்டனர். வெளியில் வரும்போது அவருடன் செல்பி எடுக்க கையில் செல் போனுடன் தயாராக இருந்தனர். நிதி அகர்வால் இறங்கியது அவரை ரசிகர்கள் சூழத் தொடங்கினார்கள்.

உடனே ஜிம் பாய் பாடிகார்டுகள் பாய்ந்து வந்து நிதி அகர்வால் பாய்ந்துவந்து பாதுகாப்பு அளித்தனர். அருகில் வர முயன்ற ரசிகர்கள் அவர்கள் பிடித்து தள்ளிவிட்டனர். நிதி அகர்வால் நடந்து சென்ற போது அவருக்கு முன்னால் ஒரு ரசிகர் தவறி கிழே விழுந்தார். அவரை கண்டு அதிர்ச்சி அடைந்த நிதி அகர்வால் அவரை எழுப்பிவிட சென்றார். அதற்குள் பாடிகார்டுகள் அந்த நபரை இழுத்து தள்ளினார்கள். படப்பிடிப்பு முடிந்து நிதி அகர்வால் அங்கிருந்து புறப்படும்போது காரில் ஏறி அமர்வதற்க்கு முன் ரசிகர்ளை பார்த்து டாட்டா காட்டினார். ரசிகர்கள் தன்னை சூழ்ந்த வீடியோ கட்சியை நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார்.

More News >>