நடிகைக்கு பிறந்த நாள் பரிசுளித்த கணவர்.. அது என்ன குட்டி சிங்கமா?
தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நிஹாரிகா. தெலுங்கில் சில படங்கள் நடித்தார். சமீபத்தில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. உதயப்பூரில் அரண்மனை ஓட்டலில் திருமணம் நடந்தது. நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் என பலர் கலந்துகொண்டனர். அங்கு நடந்த நடன நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று நடனம் ஆடினார்கள். நிஹாரிகாவை தொழில் அதிபர் சைதன்யா மணந்தார். தடபுடலாக உதய்பூரில் இவர்கள் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நடந்தது. பின்னர் ஐதராபாத்திலும் இவர்கள் திருமண வரவேற்பு 2வது முறையாக நடந்தது. நிஹாரிகாவுக்கு சமீபத்தில் பிறந்த நாள் ஆகும். அவருக்கு கணவர் சைதன்யா அழகான பரிசளித்தார்.
அதைக்கண்டு பூரிப்படைந்த நிஹாரிகா கையோடு வாரி அணைத்துக் கொண்டு முத்தமிட்டு அதனுடன் கொஞ்ச ஆரம்பித்தார். அது தரையில் தலையை சாய்த்து உறங்கத் தொடங்கியதும் அதன் அருகில் தலை வைத்து படுத்துக்கொண்டதுடன் அந்த புகைப்படத்தை எடுத்து பகிர்ந்தார். நிஹாரியாவிடம் அது என்ன குட்டி சிங்கமா என்று சிலர் கேட்டனர். அதற்கு நிஹாரிகா, இது என் கணவர் எனக்கு பரிசளித்த பப்பி என்னுடைய மகன் என்று செல்லமாக பதில் அளித்தார். அந்த குட்டி நாயுடன் அவர் வெளியிட்ட படம் வைராலானது. அதில் குட்டி சிங்கம்போல் அந்த நாய் இருந்தது. அதன் கால்கள், முடியின் நிறம் எல்லாம் அச்சு அசல் சிங்க குட்டிபோல் இருந்ததால் சிலர் அந்த கேள்வியை கேட்டிருந்தனர்.
நிஹாரிகாவுக்கு கிடைத்த நாய்குட்டி மற்ற நடிகர், நடிகைகளையும் கவர்ந்திருக்கிறது. நடிகை லாவண்ய திரிபாதி இதய வடிவ இமோஜிக்களை பதிவிட்டு வாழ்த்தி இருக்கிறார். அதேபோல் நடிகர் அல்லு ஸ்ரீஷ், உன் பிறந்தநாளுக்கு கிடைத்த சிறந்த பரிசு என்று வாழ்த்தினார். கணவர் சைதன்யா வெளியிட்ட மெசேஜில், பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன் பிறந்தநாள் என்னை நீ எந்தளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாயோ அதேபோல் அமையட்டும். என்றும் சூரியாகாந்தி மலர்போல் நீ பிரகாசமா இரு என குறிப்பிட்டார். முன்னதாக நிஹாரிகா திருமணத்துக்காக ஆச்சார்யா படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு சிரஞ்சீவியும், ராம் சரணும் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.