உயர் நீதிமன்றங்களுக்கு 11 நாட்கள் விடுமுறை
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு டிச. 24 முதல் ஜனவரி 3 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் டிச. 30-ல் அவசர வழக்குகளை விசாரிக்க விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும். விடுமுறை காலங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், அனிதா சுமந்த், செந்தில்குமார் ராமசாமி, ஜி.சந்திரசேகரன், எஸ்.சிவஞானம், ஆர்.என்.மஞ்சுளா ஆகியோரும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வு வழக்குகளையும், நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்ஜாமீன், வி.சிவஞானம் ஜாமீன் மனுக்களைடும் விசாரிப்பர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.இளங்கோவன் ஆகியோர் முதலில் அமர்வாகவும், பின்னர் தனித்தனியாகவும் ரிட் மனுக்கள், குற்றவியல் மனுக்களை விசாரிப்பர். பதிவாளர் ஜெனரல் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனவரி 4ம் தேதி முதல் உயர் நீதிமன்றங்கள் வழக்கம் போல் செயல்படும்.