அமைச்சர் வீட்டுல விசேஷம்.. அடையுங்கப்பா கடைகளை..
சங்கரன்கோவில் சங்கடம்.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜ சரஸ்வதியின் இல்ல இறைச்சியை வரும் 23ம் தேதி நடக்க உள்ளது. இது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அமைச்சர் வீட்டு நிகழ்ச்சிக்கு முதல்வரும் துணை முதல்வரும் வர உள்ளதால் அன்று கடைகளை அடைக்க வேண்டும் என்ற என்று வர்த்தக சங்கத்தினர் வேண்டுகோள் விடுப்பது போல துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பிட் நோட்டீஸ் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே கடைகளை அடைக்க வேண்டும் என்று காவல்துறை மூலம் மிரட்டலான உத்தரவு வந்து விட்டது அதை வெளியில் தெரியாமல் சமாளிக்க இப்படி துண்டு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார்கள் என்று ஒரு சில வியாபாரிகள் சொல்லி புலம்பி வருகின்றனர்..