கடைகளை அடைக்க வேண்டாமாம் : அமைச்சர் ஊரின் அந்தர்பல்டி
அமைச்சர் வீட்டுல விசேஷம்..அடையுங்கப்பா கடைகளை.. என்ற தலைப்பில் மாலை 3.32 மணிக்கு ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல வைக்க முயன்று வரும் 23ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வர உள்ளனர்.
இதன் காரணமாக சங்கரன்கோவில் நகரில் கடைகளை அடைக்க வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அழுத்தம் கொடுப்பது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வியாபாரிகளுக்கு வேண்டுகோள் என்ற பெயரில் ஒரு துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களிலும் இச்செய்தி வைரல் ஆகியது. இதைத் தொடர்ந்து கடைகளை அடைக்க வேண்டாம் என்று உத்தரவு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.