நடிப்புக்காக நரம்புகளை ஆபரேஷன் மூலம் அகற்றிய நடிகை..
நடிகைகள் சிலர் தங்களின் உடல் அழகைப் பராமரிக்க பிளாஷ்டிக் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். நடிகை ரம்பா தொடங்கி நடிகை ஸ்ருதிஹாசன் வரை பல நடிகைகள் இதுபோல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பெரும்பாலும் மூக்கு அறுவை சிகிச்சை, தாடை அறுவை சிகிச்சை அல்லது உடல் எடை குறைக்க உடல் முழுவதும் உள்ள கொழுப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து தங்களது அழகை மெருகூட்டுகின்றனர். ஆனால் பல நடிகைகள் தங்களின் இந்த அறுவை சிகிச்சைபற்றி வெளியில் சொல்வதில்லை அல்லது மறுத்துவிடுகின்றனர்.
ஆனால் நடிகை ஸ்ருதி ஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்.இதுபற்றி ஸ்ருதிஹாசன் ஒருமுறை கூறும்போது, "நான் எனது மூக்கில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்தேன். அப்படி செய்ய யாரும் என்னை வற்புறுத்தவில்லை. என் மூக்கு உடைந்ததால் இந்த முடிவை எடுத்தேன். என் மூக்கு இருந்தவிதம் எனக்குப் பிடிக்கவில்லை. அது தோற்றமளிக்கும் முறை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே இந்த முடிவை நான் எடுத்தேன். உங்கள் முகம் மிகவும் மேற்கத்திய பாணியில் இருக்கிறது, இது மிகவும் கூர்மையாக உள்ளது. ஆண்பால் போன்ற தோற்றம் உள்ளது என்ற கருத்துக்களைத் தொடர்ந்து கேட்டு வந்தேன்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை நான் ஊக்குவிக்கவில்லை. அது ஒரு தனிப்பட்ட தேர்வு. எந்த நடிகைகளும் அவர்கள் அதைச் செய்யவில்லை என்று உங்களுக்குச் சொன்னால், அவர்கள் அப்பட்டமாகப் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் மக்களின் முகம் அவ்வளவு மாறாது. இந்தியப் பெண்கள் தங்கள் தோலைச் சிவப்பாக்க வேண்டும் அல்லது தலைமுடி பொன்னிறமாக டை போட வேண்டும் அல்லது கண்களில் நீல காண்டாக்ட் லென்ஸ்கள் அணிய வேண்டும் என்று நினைக்கிறார்கள் . இதுவும் அதைப்போன்ற விஷயம்தான். என் பயணத்தைப் பற்றி நான் நேர்மையாக இருக்க வேண்டும” என்று தனது பிளஷ்டிக் அறுவை சிகிச்சை பற்றித் தெரிவித்தார்.
ராஷ்மி ராக்கெட் என்ற இந்தி படத்தில் நடிக்கிறார் டாப்ஸி. இது ஓட்டப்பந்தய வீராங்கனையின் வாழ்க்கை வரலாறாக உருவாகிறது. இந்த கதாபாத்திரத்துக்காகக் கடுமையான ஒட்டப் பயிற்சிகளை நடிகை டாப்ஸி மேற்கொண்டார். அப்போது நரம்பு அகற்றும் சிகிச்சை செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது:நான் எனது பயிற்சியை முழுமையாகத் தொடங்குவதற்கு முன் எனது வெரி கோஸ் வெயின் (சுருளும் நரம்பு) வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் கண்டறிந்தேன் அந்த நரம்புகளில் உள்ள இரத்தம் தவறான திசையில் பாயும்போது இதுபோன்று பிரச்சனை ஏற்படும்.
நான் பயிற்சியை தொடங்குவதற்கு 6 வாரங்களுக்கு முன்பு எனது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் எவ்வாறு இயங்கின, அகற்றப்பட்டன என்பதை எண்ணிப்பார்க்கிறேன். இப்போது அந்த வடுக்கள் இருப்பதை நான் காண்கிறேன்.இந்த படத்திற்காக, டாப்ஸி ஒரு விளையாட்டு வீரரைப் போலத் தனது உடலை வடிவமைக்கக் கூடுதல் ரிஸ்க் எடுத்தார். இதற்கு முன்பு, டாப்ஸி ஒருபோதும் உடற் பயிற்சிகளுக்காக ஒரு உடற் பயிற்சிக் கூடத்தில் காலடி எடுத்து வைத்ததில்லை.