ஆந்திர முதல்வரின் பிறந்த நாள் : அசரவைத்த எம்எல்ஏ
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாளை முன்னிட்டு சாலையோர வியாபாரிகளுக்கு 100 தள்ளுவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ ஒருவர் அசர வைத்திருக்கிறார்.இன்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாள். இதை அவரது கட்சியினர் ஆந்திரா முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். சித்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீகாளகஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மதுசூதன ரெட்டி தனது தொகுதியில் முதல்வரின் பிறந்தநாளை மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாட நினைத்தார்.
இதற்காக 100 தள்ளுவண்டிகளை வாங்கி சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்கி அவர்களை அசர வைத்தார் வழங்கினார். நள்ளிரவு 12 மணி அளவில் சாலையோரத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்தவர்களைத் தட்டியெழுப்பி அவர்களுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு அவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். அவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார். இதே போல மாநிலம் முழுவதும் பல இடங்களில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர். அக்கட்சியினர் கேக் வெட்டியும் ஊர்வலமாகச் சென்றும் கொண்டாடி மகிழ்ந்தனர்.