மக்களிடம் கொள்ளையடித்த பணத்தையே 2000 ரூபாயாக கொடுப்பது தான் தமிழக அரசியல் : அதிர வைத்த அண்ணாமலை
மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில்தான் தேர்தல் நேரத்தில் 2000 ரூபாய் கொடுக்கிறார்கள். அதை நம்பி 5 வருடத்தை அடகு வைத்து விடாதீர்கள் என பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பேசி அதிர வைத்திருக்கிறார். விவசாய சட்டங்களின் நன்மைகள் குறித்து கோவை மாவட்டத்தில் பா.ஜ.க துணை தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கருமத்தம்பட்டி என்ற ஊரில் அவர் பொது மக்கள் மத்தியில் பேசியதாவது: தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 2000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழக அரசியல். 2000 ரூபாயை நம்பி 5 வருடத்தை மக்கள் அடகு வைத்து விடக்கூடாது.
பா.ஜ.க விற்கு மக்கள் வாக்களிக்க வில்லை எனில் தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருக்கும் தலைவர்கள், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் உங்களுக்கு அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள். சீமான் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட். சொல்வதில் ஆமையை தவிர வேறு எதையும் நம்ப கூடாது கமல் பாஸ் நிகழ்ச்சியில் இந்து தர்மத்திற்கு எதிராக செயல்படுவேன் என்று சொல்லியிருக்கிறார். அவரை மக்கள் நம்ப கூடாது, காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் மக்கள் நம்ப கூடாது கட்டின மனைவியை புருஷனை மாற்ற முடியாது. ஆனால் எம்எல்ஏக்களை மாற்ற முடியும். 2021 சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமானது.
பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது பாசம் கொண்டவர் . தமிழகத்திற்கு அவர் வந்தால் வேட்டிதான் கட்டுவார். திமுக எம்பிகள் டெல்லிக்கு விமானத்தில் சென்று நாடாளுமன்ற கேன்டீனில் சாப்பிட்டு விட்டு தூங்குகின்றனர். இங்கு வந்து பிரதமர் மோடி சரியில்லை என்று பேசுகின்றனர். திமுக எம்.பிகளுக்கு தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும். மூன்று விவசாய சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 2000 ரூபாய் கொடுக்கின்றனர் என்பதற்காக 5 வருட வாழ்க்கையை அடகு வைத்து விடாதீர்கள் எனவும் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் என்றும் அண்ணாமலை பேசியிருப்பது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.