காமன்வெல்த் போட்டி: இந்திய வீரர் பிரதீப் சிங்கிற்கு வெள்ளி பதக்கம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட சுமார் 71 நாடுகள் பங்கேற்றுள்ளன.பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்ட இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று வருகிறது.
அதன்படி, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பிரதீப் சிங் வெள்ளி பதக்கம் வென்றார். ஏற்கனவே 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com