எம்ஜிஆரை பற்றி மீண்டும் பேச வைத்த பெருமை எங்களையே சாரும்: கமலஹாசன்

எம்ஜிஆரை பற்றி மீண்டும் அதிமுகவினரை பேச வைத்த பெருமை எங்களையே சாரும் எனக் கமலஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் செஞ்சியில் இன்று பேசியதாவது:தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். ஆனால் அவற்றைச் செயல்படுத்துவது கிடையாது. அரசு கஜானாவுக்குத் தடுப்பணை போட வேண்டும். அதற்குத் தான் தயாராகி வருகிறோம். பெண்களுக்குச் சமமான உரிமை, சரியான சம்பளம் வழங்க வேண்டும். இதையும் நாங்கள் செய்வோம்.

திரளாக வாருங்கள். மாற்றத்தைத் தாருங்கள். நாங்கள் வியாபாரத்திற்கு வரவில்லை. நேற்று வரை டீக்கடை வைத்து இருந்தவர் இன்று பணக்காரர்கள் வியப்படையும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார். நேர்மைக்குத் தனி மரியாதை, தனி திமிர் உண்டு. என் நேர்மையைச் சந்தேகித்தால் எனக்குக் கோபம் வருகிறது.மீண்டும் எம்ஜிஆரை அதிமுக பேச வைத்த பெருமை, படத்தை வைக்க வைத்த பெருமை எங்களைத்தான் சாரும்.தேர்தல் விரைவாக வந்தாலும் அதையும் எதிர்கொள்ள, தயாராக இருக்கிறோம். என்றார்.

More News >>