7,926 கோடி ரூபாய் மோசடி... சிக்கலில் ஹைதராபாத் தொழிலதிபர்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில்(பி.என்.பி) ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியை சி.பி.ஐ. அதிகாரிகள் தேடிவந்த நிலையில், அவர் லண்டனுக்கு தப்பியோடினார். இந்தியா வலியுறுத்தலின்படி, லண்டனில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், வின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிரவ் மோடி நவ.6 ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மாஜிஸ்திரேட் எம்மா அர்பூத்நாட் விசாரணை செய்தார். நிரவ் மோடி வாக்குமூலம் அளிக்கையில், என்னை இந்தியாவுக்கு அனுப்பக் கூடாது. அங்கு நியாயமான விசாரணை நடைபெறாது. எனக்கு அங்கு நீதி கிடைக்காது. எனவே, இந்தியாவுக்கு என்னை நாடு கடத்தினால், நான் உயிரை மாய்த்து கொள்வேன் என்றார். லண்டன் சிறையில் தன் மீது 3 முறை தாக்குதல் நடந்ததாகவும் கூறினார். இவரை இந்தியா கொண்டு வருவது தள்ளிக்கொண்டே செல்கிறது.

இதற்கிடையே நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'டிரான்ஸ்ட்ராய் இந்தியா' நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான செருகுரி ஸ்ரீதர், இணை இயக்குநர்கள் ராயபதி சாம்பசிவ ராவ் மற்றும் அக்கினேனி சதீஷ் ஆகியோர்தான் மோசடி குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார்கள். சிபிஐ இவர்கள் மீது நடத்திய ரெய்டில் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் சிக்க தற்போது இவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. இவர்கள் 7,926 கோடி ரூபாய் மோசடி ஆவணங்கள் வைத்து கடன் பெற்றுள்ளது ரெய்டில் தெரியவந்துளளது.

More News >>