Tnpsc 2021 ஆம் ஆண்டிற்கான கால அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 2020 ல் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அரசு வேலையே இலட்சியமாக கொண்டு, அத்தேர்விற்காக அதி தீவிரமான பயிற்சியை பல இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு 2020 கடினமான ஆண்டாக இருந்தாலும், 2021 கண்டிப்பாக அவர்களை பிரமிக்க வைக்கும் ஆண்டாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். காரணம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2021 ம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் வரும் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 42 பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை துறை, விவசாய துறை, பொறியியல் துறை, கட்டுமான துறை, தொல்லியல் துறை, மீன்வள துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, கூட்டுறவு துறை, புள்ளியியல் துறை, புவியியல் துறை, சட்டத்துறை, நகர்புற மேம்பாட்டு துறை, குடிமையியல் துறை (Gr II) , தொழிற்சாலை மற்றும் வர்த்தக துறை, சிறைத்துறை, இந்து அறநிலையத்துறை, குடும்ப நல்வாழ்வு துறை, மருத்துவ துறை, நூலகத்துறை, சமூக பாதுகாப்பு துறை, காடு வளர்ப்பு துறை, சத்துணவு துறை, பள்ளிக்கல்வி துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை என கிட்டத்தட்ட 40 துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வரும் 2021 ல் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட தயாராக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.tnpsc.gov.in/

https://tamil.thesubeditor.com/media/2020/12/2021_ARP_Planner_16_12_2020.pdf

More News >>