காவிரி போரட்டத்தில் ஒதுங்கி கொண்ட அஜித்!
காவிரி விவகாரத்திற்காக சினிமாத் துறையினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் நடிகர் அஜித் கலந்துகொள்ளாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் சினிமாத்துறையினர் சார்பில் கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
நேற்று ஞாயிறன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட சினிமா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு வருமாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த சுமார் 3000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் விஜய், தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
ஆனால், போராட்டத்திற்கு விஜயகாந்த் வரவில்லை. பலத்த ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள அஜித்குமார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அஜித், ரசிகர்கள் பலர் இன்று போராட்டம் நடத்தப்பட்ட வள்ளுவர் கோட்டம் அருகே பெருவாரியாக குவிந்தனர். ஆனால், கடைசியில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
மேலும், இந்த போராட்டத்தில் சிம்பு, விஷ்ணு விஷால், ஆர்யா, சந்தானம், வடிவேலு, பிரகாஷ்ராஜ், ஜி.வி.பிரகாஷ், அதர்வா, பரத், விக்ரம் பிரபு ஆகியோரும் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com