ஓசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 5 பெண்கள் பலி
ஓசூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் 5 பெண்கள் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மலைப் பகுதியில் உள்ள கோவிலுக்கு கர்நாடக மாநிலம் கனகபுரா பகுதியை சேர்ந்த பக்தர்கள் 25 பேர் ஒரு டிராக்டரில் வழிபாடு செய்ய வந்தனர்.
மஞ்சுகொண்ட பள்ளி அருகே பசுவேஸ்வரா கோவிலுக்கு வந்தபோது தப்பகுழி என்ற பகுதியில் டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு அஞ்செட்டி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்