ஏழு பயிற்சியாளர்களுடன் களமிறங்கும் இங்கிலாந்து அணி!
சமீபத்தில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று இருபது ஓவர் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஆனால் ஒருநாள் போட்டியானது, கொரோனா நோய் தொற்று சில வீரர்களிடம் தென்பட்டதால் அனைத்து ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஆசியா கண்டத்தில் இலங்கை மற்றும் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணிக்கு தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜாக்கஸ் காலிஸ், இங்கிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இலங்கை மற்றும் இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி ஏழு பயிற்சியாளர்கள் உடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தயாராகி வருகிறது. தலைமை பயிற்சியாளராக கிறிஸ் சில்வரவுடுடன், பேட்டிங் பயிற்சியாளர் ஜாக்கஸ் காலிஸ், பந்துவீச்சு பயிற்சியாளராக ஜான் லிவிஸ், சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக ஜீதன் படேல் என ஒரு பட்டாளமே இங்கிலாந்து அணியுடன் பயணம் மேற்கொள்ள தயாராகி வருகிறது.