397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் ஒரு விந்தை..
397 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்கள் ஒரு புள்ளியைப் போல மிக நெருக்கமாய் அமைந்த அபூர்வ நிகழ்வு இன்று நடந்தது.சூரியனைச் சுற்றி வரும் கோள்களில் வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்கள் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்.இதிலும் வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் ஒரே நேர்கோட்டில் மிக நெருக்கமாகச் சந்திக்கும் நிகழ்வு 397 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிகழ்ந்தது.
இரு கோள்களும் 397 ஆண்டுகளுக்கு முன்பு 0.08 டிகிரி நேர்கோட்டில் மிக நெருக்கமாகச் சந்தித்தது. அதே சமயம் தற்போது இரு கோள்களும் 0.01 நேர்கோட்டில் மிக நெருக்கமாகச் சந்திப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சூரிய மண்டலத்தின் ஆறாவது கிரகமான சனி வியாழனுக்கு இடது புறத்தில் தோன்றுகிறது.
வியாழனில் இருந்து சனி இரண்டு மடங்கு தொலைவில் இருப்பதால் வியாழனை விடப் பிரகாசமாக இருக்கும்.மிகச்சரியாக 19.6 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரு கோள்களும் டிசம்பர் 20,21,22 ஆகிய தேதிகளில் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்.கிரேட் ஜங்ஷன் எனப்படும் இந்த இந்நிகழ்வை உபகரணங்கள் இன்றி வெறும் கண்களால் பார்க்க முடிந்தாலும் தொலைநோக்கி மூலம் தென்மேற்கு திசையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு தெளிவாகப் பார்க்க இயலும் என்கிறார்கள் நிபுணர்கள்.மீண்டும் 2080 ஆம் ஆண்டு வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்க வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.