வங்கி மோசடி: வெளிநாடு தப்பிய நீரவ் மோடிக்கு பிடிவாரன்ட்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12 ஆயிரம் கோடி மோசடி செய்து நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பினர். இதனால், இவர்கள் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நிரவ் மோடி மற்றும் உறவினருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இருவரும் ஆஜராகததை அடுத்து, மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவானது, 2 பேருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com