கூகுள் போட்டோக்களில் புதிய எபெஃக்ட்!

கூகுள் மெஷின் லேர்னிங்கை பயன்படுத்தி புகைப்படங்களின் செறிவை (depth) கண்டுபிடிப்பதோடு முப்பரிமாண (3D) எபெஃக்ட் கொடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. செறிவை அளவிடும் தொழில்நுட்பம் இல்லாத காமிராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் டெப்த்தையும் சினிமேட்டிக் எபெஃக்ட் அளவிட்டு காட்டும்.

அதே படத்தின் 3டி வடிவத்தையும் இது காட்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர் களுக்கு இவ்வசதி கிடைக்கும். கூகுள் போட்டோஸில் செட்டிங்கை மாற்றுவதன் மூலம் சினிமேட்டிக் எபெஃக்ட் செயல்படுவதை தவிர்க்கலாம். இது அடுத்த மாதம் அறிமுகமாக உள்ளது.

More News >>