23 ஆம் தேதியில் இருந்து இவர் தான் முல்லையாம்.. அதிகாரபூர்வமாக வந்த தகவல்
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூன்று வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் மூன்று அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை எடுத்து கூறும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது. இதலில் முக்கிய கதாபாத்திரத்தில் வி ஜே சித்ரா என்பவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக குமரன் என்பவர் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சித்ரா நட்சத்திர ஹோட்டலில் திடிரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் முல்லை கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்று சீரியல் குழு குழம்பியது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் காவ்யா என்பவர் அறிவாக நடித்து கொண்டிருக்கிறார்.
இதனால் இவரை முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க குழு திட்டமிடபட்டுள்ளது. சித்ரா நடித்த எபிசோடு வருகின்ற 22 ஆம் தேதி அன்றோடு முடிவு பெறுகிறது. வருகின்ற புதன் கிழமையில் இருந்து புது முல்லையை பாண்டியன் ஸ்டோர்ஸில் எதிர் பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் காவ்யா முல்லையாக மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.