கபடி கோச்சாக மாறிய ஹீரோயின் கேக் வெட்டினார்..
கிரிக்கெட் படங்களாக தோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வெளியாகி வெற்றி பெற்றது, இதையடுத்து விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் உருவாகி வெளியாகின. அப்படங்கள் அடுத்தடுத்து வந்து வரவேற்பை பெற்றன. தமிழில் வெண்ணிலா கபடி குழு, பிகில், கனா போன்ற படங்கள் வந்தன இவை வரவேற்பும் பெற்றது. பிகில் படத்தில் நடிகர் விஜய் ஃபுட்பால் கோச்சாக நடித்து அசத்தினார். தற்போது நடிகை தமன்னா கபடி கோச்சாக புதிய படத்தில் நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் சீட்டி மார் என்ற பெயரில் உருவாகிறது. இதற்காக தமன்னா கபடி பயிற்சி பெற்றதுடன் கோச்சாக நடிக்கவும் பயிற்சி பெற்றார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடலை ஃபிட்டாக வைக்க கடுமையான உடற்பயிற்சிகளும் செய்தார். தமன்னாவுக்கு நேற்று பிறந்ததினம். அவர் சீட்டிமார் படப்பிடிப்பில் இருந்தார்.
சஸ்பென்ஸாக படக்குழு படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. படப்பிடிப்பு இடை வேளையில் தமன்னாவை பிறந்த நாள் கேக் வெட்ட அழைத்தனர். அவர் ஆச்சரியம் அடைந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடத்துக்கு வந்து படக்குழுவினார் ஹாப்பி பர்த்டே சொல்ல கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இப்படத்தில் ஜூவாலா ரெட்டி என்ற பாத்திரம் ஏற்றிருக்கிறார் தமன்னா. அந்த பெயரை ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்ததுடன் படப்பிடிப்பு அரங்கில் தமன்னா பிறந்த நாள் கொண்டாடியதை வீடியோவாக வெளியிட்டது. இப்படத்தில் கோபி சந்த் ஹீரோவாக நடிக்கிறார். செட்டில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு கேரவேன் வந்த தமன்னாவுக்கு அவரது தோழிகள் சர்ப்ரைஸாக விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
தமன்னா கேரவேன் உள்ள படியேறி வந்ததும் அவரது தோழி நடனம் ஆடி தமன்னாவை வரவேற்றார். தமன்னாவும் அவருடன் நடனம் ஆடினார். முன்னதாக கொரோனா ஊரடங்கால் சீட்டிமார் படப்பிடிப்பு தடைபட்டிருந்தது. லாக்டவுனுக்கு முன்புவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்தது. லாக்டவுன் தளர்வில் படப்பிடிப்பை தொடங்க எண்ணியபோது தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. படப்பிடிப்பை தள்ளிவைத்தனர். கடந்த நவம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது தமன்னா முழுஒத்துழைப்புடன் படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார்.