மற்றொரு பிரபல நடிகைக்கு கொரோனா.. சந்தித்தவர்களுக்கு எச்சரிக்கை..
கொரோனா காலகட்டம் இன்னும் மக்களையும் விடவில்லை, திரையுலக பிரபலங்களையும் விடவில்லை. கடந்த மாதங்களில் கொரோனா தொற்றால் நடிகை தமன்னா பாதிக்கப்பட்டார். ஐதராபாத்துக்கு வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்க வந்தபோது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்ந்து சில நாட்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். 3 வாரக் கால சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்து வீடு திரும்பினார்.
பின்னர் சில நாட்கள் வீட்டில் உடற்பயிற்சி. யோகா செய்து ஷூட்டிங்கிற்கு ஃபிட்டாக தன்னை தயார்ப்படுத்தினார். கடந்த நவம்பர் மாதம் அவர் ஐதராபாத் வந்தார். அங்கு ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடக்கும் சீட்டிமார் தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியுடனும். என் ஜி கே படத்தில் சூர்யாவுடனும் நடித்தார். மேலும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது அஜய் தேவ்கன் தயாரித்து இயக்கி நடிக்கும் மேடே படத்தில் நடிக்கிறார். அதன் படப்பிடிப்பில் ரகுல் கலந்து கொண்டு நடித்து வந்தார்.இந்நிலையில் ரகுல் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில் நான் கோவிட்19 (கொரோனா தொற்று)பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன். என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். நான் நன்றாக இருக்கிறேன். நல்ல ஓய்வுக்குப் பிறகு விரைந்து ஷூட்டிங்கில் பங்கேற்க வேண்டி உள்ளது.
என்னைச் சமீபத்தில் சந்தித்தவர்கள் கோவிட் 19 பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. எல்லோரும் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என ரகுல் ப்ரீத் சிங் கூறி உள்ளார். ரகுல் ப்ரீத் சிங் சில மாதங்களுக்கு முன் மும்பையில் போதை மருந்து வழக்கில் இணைத்துப் பேசப்பட்டார். அவரிடம் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் விடுமுறை பயணமாக அவர் குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ஜாலியாக பொழுதைச் செலவிட்டுத் திரும்பினார்.