அணு ஆயுதத்தைக் கைவிட வடகொரியா சம்மதம்hellip துரிதமாகும் அமைதிப் பேச்சுவார்த்தை!

தன் வசமுள்ள அணு ஆயுதங்களைக் கைவிட வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அபரிமிதமான அணு ஆயுத சோதனையால் வடகொரியா – தென் கொரியா இடையே பல மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. ஆனால், தற்போது இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மேலும் வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அடுத்த மாதம் சந்திக்க உள்ளதால், உலக நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் நிலவி வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான் அமெரிக்கா, வடகொரியாவுக்கு ஒரு நிபந்தனையை வைத்தது. `வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கைவிட்டால்தான் சுமூகப் பேச்சுவார்த்தைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்’ என்று கோரிக்கை விடுத்தது அமெரிக்கா.

இதுநாள் வரை வடகொரியா இது குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இது குறித்து அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான `தி வாஷிங்டன் போஸ்ட்’, `நமக்கு அமெரிக்க அரசாங்க தரப்பு அதிகாரி ஒருவர் அளித்த தகவலின்படி, வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிட சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் இறுதிக்குள் கிம்- ட்ரம்ப் சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>