108 எம்பி பிரைமரி காமிரா, செல்ஃபிக்கு 16 எம்பி காமிரா... வருகிறது புதிய ஸ்மார்ட்போன்
பின்புறம் நான்கு காமிராக்களுடன் (குவாட் காமிரா) புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஸோமி நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட் போன் மி10ஐ ஆக இருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது. புதிய போன் ஜனவரி 5ம் தேதி அறிமுகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், நோட் 9 ப்ரோ 5 ஜி போன்தான், புதிய பெயரில் மி10ஐ என்று சந்தைக்கு வர இருப்பதாக ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் யூகிக்கின்றனர்.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
தொடுதிரை : 6.67 அங்குலம் எஃப்எச்டி; 2400X1080 பிக்ஸல் தரம்;ரெஃப்ரஷ் விகிதாச்சாரம்: 120 Hzஇயக்கவேகம்: 6 ஜிபி அல்லது 8 ஜிபிசேமிப்பளவு: 128 ஜிபிபின்புற காமிரா: 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (குவாட் காமிரா)முன்புற காமிரா: 16 எம்பிபிராசஸர்: ஸ்நாப்டிராகன் 750ஜி SoCஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11மின்கலம்: 4820 mAhபாஸ்ட் சார்ஜிங்: 33W
ஸோமி நிறுவனம் 2021ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் மி 10 ஐ ஆகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான தகவல் அறிவிக்கப்பட்டால்தான் யூகங்கள் சரியானவையா என்பது தெரிய வரும்.