முகத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!

குளிர் காலத்தில் நம் முகம் வறண்டு காணப்படும். இதனால் சருமத்தில் பிரச்சனைகள் வர நிறைய வாய்ப்பு உள்ளது. சருமம் வறண்டால் அரிப்பு, வெடிப்பு போன்றவை நம் சருமத்தை நெருங்கும். குளிர்காலத்தில் நம் சருமத்திற்கு ஈரப்பதம் தேவை அவ்விரபதத்தை தக்க வைக்க இயற்கையான முறையில் சில குறிப்புகளை காணலாம்.. இக் குறிப்புகளை வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே தயார் செய்யலாம்..

வாழைப்பழத்தின் நன்மை:-வாழைப்பழத்தில் உள்ள வழு வழுப்பு தன்மை முகத்தை பொலிவு செய்கிறது. எல்லா இடத்திலும் மலிவாக கிடைக்கும் வாழைப்பழம் சருமத்திற்கு மிகவும் நல்லது.ஒரு கிண்ணத்தில் வாழைபழத்தை மசித்து அதில் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் போட வேண்டும். 15 நிமிடம் கழித்து மிதமான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தேனின் நன்மை:-தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கப்பில் 1 ஸ்பூன் தேன் மற்றும் ஃப்ரஷ் க்ரீம் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து சருமம் மென்மையாக இருக்கும்.

பாலின் நன்மை:-பாலில் இயற்கையாகவே மாய்ஸ்ச்ரேசர் உள்ளதால் முகத்தை ஈரப்பதமாக வைத்து கொள்கிறது. தினமும் பச்சை பாலுடன் கொஞ்சம் தண்ணீர் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகம் பொலிவு மற்றும் மென்மை அடைவதால் சருமம் வறண்டு போகாமல் காக்கின்றது.

More News >>