ஹால் டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயம்: குரூப் 1 தேர்வு விண்ணப்பதாரர்கள் ஆதார் இணைக்க TNPSC அறிவுரை

இனி ஆதார் எண் இருந்தால் மட்டுமே TNPSC ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய நபர்கள் முதல் 100 இடங்களில் 40-க்கும் அதிகமானோர் முன்னிலை பெற்றனர். முறைகேடு தொடர்பாக TNPSC அலுவலக உதவியாளர் ஓம் காந்தன் உள்ளிட்ட 57 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைபோல், 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்விலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஒ தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவப்போது முறைக்கேடுகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, தேர்வில் முறைகேடு நடைபெறாமல் இருக்க TNPSC பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, போட்டி தேர்வெழுத ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

நிரந்தபதிவில் ஆதார் எண் பதிவு செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும் என்றும் ஆதார் எண் பதிவு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் அறிந்து கொள்ளலாம் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஜனவரியில் நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் விரைவில் இணைக்கவும் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

More News >>