10 AM to 4 PM NO: சென்னை மின்சார ரயில்களில் பயணிக்க கட்டுப்பாடுகள்!
சென்னை மின்சார ரயில்களில் பொதுமக்கள் நாளை முதல் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முக்கியமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, கொரோனா தொற்று குறைய தொடங்கிய காரணத்தினால், நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தது. இதன்படி, முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதற்கிடையே, பல்வேறு கட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு சென்னையில் மின்சார ரயில் இயக்கப்பட்டது. முதலில் அரசு பணியாளர்களுக்கு மட்டுமே ரயில் இயக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து படிப்படியாக, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பெண்கள் என ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அந்த வரிசையில் நாளை முதல் பொதுமக்களும் மின்சார ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பயணிக்க அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் (10 AM - 4 PM) அனைவரும் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.