ஹாலிவுட்போல் தமிழில் சைன்ஸ் ஃபிக்ஸன் படங்கள்..
ஹாலிவுட்டில் திரைப்படங்களில் என்னவெல்லாம் மாற்றம் ஏற்படுகிறதோ அதேபோல் மாற்றம் கோலிவுட்டில் மிக விரைவாகவே எதிரொலிக்கிறது. ஜாம்பி படங்கள் முதல் சைன்ஸ் ஃபிக்ஷன் வரை தமிழ் படங்களில் கதைகள் அரங்கேறி வருகிறது. ஜெயம் ரவி நடித்த மிருதன் படமும் அதன்பிறகு வெளியான யோகிபானபுவின் காமெடி படமான ஜாம்பியும் ஜாம்பி கதை அம்சமுள்ள படங்களாக உருவாகின. மனிதனை வேட்டையாடும் கதையாக இது அமைந்திருந்தது. மிருதன் படத்துன் 2ம் பாகத்துக்கும் திட்டமிட்டுள்ளனர். வேற்றுகிரகவாசி சைன்ஸ் ஃபிக்சன் கதையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படம் உருவாகிறது. மற்றொரு சைன்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகிறது டிஸ்டண்ட் என்ற படம்.
முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி. இசட். துரை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'டிஸ்டண்ட்' எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லு சாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார். இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் குறும்படத்தை இயக்கியவர். மேலும் இவரது 'காதலின் தீபம் ஒன்று' குறும்படம் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஜய் சித்தார்த் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சில நிமிடங்களே ஓடும் டீஸரில் சஸ்பென்சை புதைத்து வைத்திருக்கிறார் இயக்குனர். வேற்றுகிரகத்திலிருந்து வந்த மனித வடிவிலான ஒரு மிருகம் உடனே இந்த கண்டத்தை விட்டு போக துடிக்கிறது. அதற்கிடையில் நடக்கும் சம்பவங்களை உள்ளடகியதாக டீஸரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் சித்தார்த்தா இசை அமைக்கிறார்.பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆதி பாடல்கள் எழுதுகிறார். இளையராஜா எடிட்டிங் செய்கிறார். தேவா அரங்கம் அமைக்கிறார். சுதேஷ் ஸ்டண்ட் பயிற்சி அளிக்கிறார். முத்துகுமரன் வி எஃப் எக்ஸ் செய்கிறார். தயாரிப்பு: சுரேஷ் நல்லுசாமி, முருகன் நல்லுசாமி.